வியாழன், 28 ஏப்ரல், 2011

2. இலக்கை வரையறுப்போம்

வாழ்வின் இலக்கை சரியான முறையில் வரையறை செய்து விட்டால் செயல்பாட்டில் சோர்வு இருக்காது. வெறுப்பு இருக்காது மற்றும் எரிச்சல் இருக்காது. இலக்கை வரையறை செய்யும்பொழுது அது அடையக்கூடிய, சாதிக்க கூடிய இலக்காய் இருப்பது அவசியம்.

நமக்கு நாமே வரையறுத்து கொண்டால் தான் அது இலக்கு! மற்றவர் நம் மீது திணித்தால் அதன் பெயர் தண்டனை!

இலக்கை வரையறை செய்வது எப்படி?

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பொதுத் தேர்வில் ஆயிரத்து இருநூறுக்கு எவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும்.

மதிப்பெண்ணை முடிவு செய்துவிட்டலே இலக்கை வரையறுத்துவிட்டதாக பொருளாகாது!

அந்த மதிப்பெண்ணை பயன்படுத்தி எந்த உயர் படிப்புக்கு செல்ல வேண்டும்?

அந்த படிப்பை முடித்துவிட்டு, எந்த பதவிக்கு செல்ல வேண்டும்?

அந்த பதவியை பயன்படுத்தி சமுதாயத்தில் எப்படி சிறப்பாக செயலாற்றவேண்டும்?

சிறப்பாக செயலாற்றுவதன் மூலம் மற்றவர்களுக்கு எப்படி முன்மாதிரியாய் விளங்க வேண்டும்?

இவையனைத்தையும் வரையறுப்பதுதான் இலக்கு!

1. எல்லாமும் இலக்குதான்

ஒரு மனிதனின் எல்லாவகையான செயல்பாடுகளையும் முடிவு செய்வது அவனது இலக்குதான்! எந்த குறிக்கோளும் இல்லாமல் சுற்றி திரிபவனை இலக்கில்லாமல் உள்ளான் என்கிறோம்.

இலக்குதான் ஒருவனின் அறிவை கூர்மையாக்குகிறது!
இலக்குதான் ஒருவனை சதனையாளனாக்குகிறது!
இலக்குதான் வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்துகிறது!
இலக்குதான் வாழ்வை சுவையுள்ளதாக்குகிறது!
இலக்குதான் ஒருவனை செயல்பட வைக்கிறது!
இலக்குதான் ஒருவனுக்கு அனுபவம் தருகிறது!
இலக்குதான் வாழ்வை உன்னதமாக்குகிறது!



வெள்ளையனுக்கு எதிராக கப்பல் விட வேண்டும் என்ற வ.உ.சிதம்பரனாரின் இலக்கு........

அடிமை வாழ்வில் அமிழ்ந்து கிடந்த இளைஞர்களை தாயக விடுதலைக்காக தட்டி எழுப்ப வேண்டும் என்ற மாவீரன் பகத்சிங்கின் இலக்கு.....

அம்மை நோயை உலகை விட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்ற மருத்துவ மாமேதை ஜென்னரின் இலக்கு...

அவர்களை மாமனிதர்களாக்கியது!

இலக்கு இல்லா மனிதன் உயிர் வாழும் பிணம்!


மனிதனை தொடர்ந்து இயக்கும் விசை இலக்குதான்!

திங்கள், 11 ஏப்ரல், 2011

2011 சட்ட மன்ற தேர்தல் பற்றிய விழிப்புணர்வு எழுச்சி பேருரை

எழுச்சியுரை பாகம் - 1

எழுச்சியுரை பாகம் - 2

எழுச்சியுரை பாகம் - 3

புதன், 6 ஏப்ரல், 2011

நம் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான 20 திருக்குறள்கள்

1
செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்

செய்யக்கூடாத செயல்களை செய்தால் துன்பம்!
செய்யவேண்டிய செயல்களை செய்யவில்லை என்றாலும் துன்பம்
2
தூங்குக தூங்கி செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

காலம் தாழ்த்தி செய்யவேண்டிய செயல்களை காலம் தாழ்த்தித்தான் செய்யவேண்டும்
உடனே செய்யவேண்டிய செயல்களை உடனே செய்ய வேண்டும்
3
ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை

ஒரு செயலை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவரிடம் இருக்க வேண்டிய கருவி பணிவுடைமையாகும்.
போர்க்கருவிகள் மற்றவர்களை பயமுறுத்தும். அனால், பணிவு என்ற கருவி எதிரியையும் நண்பனாக்கும் ஆற்றல் உடையது
4
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்

நெடுநீர் - செயலைத் தள்ளிப் போடுதல்
மறவி - மறந்துவிடுதல்
மடி - சோம்பல்
துயில் - தேவைக்கு அதிகமாய் தூங்குதல்
இந்த நான்கு பண்புகளும் "வாழ்வில் நான் உறுதியாய் உருப்படமாட்டேன்"
என்ற இலட்சியம் கொண்டவர்கள் விரும்பி பயணம் செய்யும் மறக்கலாமாகும்
5
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்(கு) இயல்பு

அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், ஆகிய நன்கு பண்புகளும் அரசனுக்கு இருக்க வேண்டிய தலைமைப் பண்புகள் ஆகும்
6
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்க நிலன் ஆள் பவர்க்கு

தூங்காமை (காலம் தாழ்த்தாது விரைந்து செயல்படுதல்), கல்வி, துணிவுடைமை ஆகிய மூன்று பண்புகளும் அரசனுக்கு இருக்க வேண்டிய தலைமைப் பண்புகள் ஆகும்
7
சென்ற இடத்தால் செலவிடா தீ(து)ஒரிஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

மனதை அது விரும்பும் வழிகளிலெல்லாம் அனுமதிக்காமல் நல்ல கருத்துக்களில், நல்ல செயல்களில் செலுத்துவதே அறிவு ஆகும்.
8
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவ(து)
அஞ்சல் அறிவார் தொழில்

அஞ்சவேண்டிய செயல்களுக்கு அஞ்சாமல் இருப்பது முட்டாள்தனமாகும்.
அஞ்சவேண்டிய செயல்களுக்கு அஞ்சுவதே அறிவுடைமையாகும்
9
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

நம்மை நாமே புகழ்ந்து கொள்ளக் கூடாது. நன்மை தராத செயல்களை செய்தல் கூடாது.
10
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

ஒருவனின் பெருமைக்கும் அவன் சிறுமைக்கும் அடிப்படையாய் அமைவது அவன் செயல்களே
11
உடையார் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடைய(து) உடையரோ மற்று

ஒருவனின் ஊண்மையான செல்வம் ஊக்கமுடைமை ஆகும்.
ஊக்கம் இல்லாதவனுக்கு பிற செல்வங்களால் பயன் இல்லை.
12
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

முயற்சி பெருமைக்குரிய வெற்றியைத் தரும்.
முயற்சியின்மை தோல்வியையும், துன்பத்தையும் தரும்.
13
சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

பேச்சாற்றல் மிக்கவன், சோர்வில்லாமல் செயல்படுபவன் அச்சம் இல்லாதவனை
மற்றவரால் வெல்ல முடியாது.
14
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற

ஒரு செயலை செய்து முடிக்கும் ஆற்றல் ஒருவன் மன ஊறுதியைச் சார்ந்தது.
பிற காரணங்கள் முதன்மையானவை அல்ல
15
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை

தனக்கு துன்பம் வருவதாய் இருந்தாலும் சமுதாயத்துக்கு
இன்பம் தரும் செயலை துணிந்து செய்தல் வேண்டும்
16
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

உயர்ந்த நோக்கத்துடன் நல்ல கருத்துக்களை நாம் பேசும் போது
சமுதாயத்தில் காணப்படும் சீர்கேடுகள், ஒழுங்கீனங்கள் அழியும், அறம் பெருகும்
17
கொன்றன்ன இன்னா செய்யினும் அவர்செய்த
ஒன்றுநன்(று) உள்ளக் கெடும்

கொலை செய்தலுக்கு ஒப்ப பல கெடுதல்களை நமக்கு ஒருவள்
செய்து இருந்தாலும் அவர் செய்த எதேனும் ஒரு நன்மையை நாம்
எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போது அவர் மீது நமக்கு வெறுப்பு வளராது
18

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் எடும்பைத் தரும்

நல்லொழுக்கம் நன்மை தரும்.
தீயொழுக்கம் எப்பொழுதும் துன்பம் தரும்
19
ஒழுக்காறாக் கொள்க ஒருவன் தன நெஞ்சத்(து)
அழுக்கா(று) இலாத இயல்பு

மனதில் பொறமை இல்லாத இயல்பை ஒருவன் இயல்பாய்
பழக்கபடுத்தி கொள்ள வேண்டும்
20
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

தீய செயல்கள் தீமையை தருகின்றன.
எனவே தீய செயல்கள் தீயை விட ஆபத்தானவை